செய்திகள்

தேநீர் கட்டணத்தை மொபைல் மூலம் செலுத்திய அரியானா முதல்வர்

Published On 2016-12-15 11:46 GMT   |   Update On 2016-12-15 11:46 GMT
தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பணம் செலுத்தியிருக்கிறார்.
கர்னால்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து பணமில்லா பரிவர்த்தனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரியானா மாநில முதல்வர் தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார்.

முதல்வர் மனோகர் லால் கட்டார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் கர்னால் பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார். பின்னர் அந்த கட்டணத்தை தனது மொபைலில் உள்ள இ-சேவை மூலமாக தேநீர் கடைக்காரரின் அக்கவுண்ட்டுக்கு பரிமாற்றம் செய்தார்.

அதுமட்டுமின்றி பணமில்லா பரிவர்த்தனை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுமாறு தேநீர்க் கடைக்காரரையும் மனோகர் லால் கேட்டுக்கொண்டார். பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் மனோகர் லால் கட்டார் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

Similar News