செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது: மத்திய அரசு

Published On 2016-11-29 16:34 IST   |   Update On 2016-11-29 16:34:00 IST
பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அந்த செல்லாத நோட்டுகளை வங்கிகளில் செலுத்த டிசம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அங்கு செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும்,போதிய அளவு பணம் ஆர்.பி.ஐ, ரிசர்வ் வங்கிகளில் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

''கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தால் அதற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். அதே நேரம் இந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி வருமான வரி இலாகா கேள்விகள், ஆதாரம் எதையும் டெபாசிட் செய்வோரிடம் கேட்காது" என மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News