செய்திகள்

சுங்கத் துறையில் டிச. 1 முதல் காகித பயன்பாடு குறைகிறது

Published On 2016-11-29 00:06 GMT   |   Update On 2016-11-29 00:06 GMT
சுங்கத் துறை அனுமதி வழங்கப்படும் விவகாரங்களில் காகித பயன்பாடினை வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பெருமளவில் குறைக்க மத்திய நிதித் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு அலுவலகங்களில் காகிதப் பயன்பாட்டின் அளவினை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு பெரிய துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுங்கத் துறையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்டவற்றிற்கான காகித பயன்பாடு வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பெருமளவில் குறையும் என்று மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மின்னணு செய்தி வழியாக நடைபெறுவதற்கு உதவும். மேலும் காகித பயன்பாட்டின் அளவு குறைந்து சுற்றுச் சூழல் பாதிப்பு குறையும்.

மேலும் காகித பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வியாபாரம் செய்வதற்கான வழி முறைகளும் எளிமையாக்கப்படும்.

மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் சார்பில் முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

Similar News