செய்திகள்

திருப்பதி மலைப்பாதைகளில் பேட்டரி பஸ்களை இயக்க ஆலோசனை

Published On 2016-11-14 10:02 GMT   |   Update On 2016-11-14 10:02 GMT
திருப்பதி மலைப்பாதைகளில் பேட்டரி பஸ்களை இயக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருமலை:

திருமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், சப்தமில்லாமலும் இருக்க, திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் டீசல் பஸ்களுக்குப் பதிலாக ‘கார்பன் ஹைப்ரீட் பேட்டரி பஸ்’களை இயக்க ஆந்திர அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு, ஒரு தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேட்டரி பஸ்கள் இன்னோவா கார், இண்டிகா கார் விலைக்கே கிடைக்கும் என்றும் அந்தத் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஒருசில பேட்டரி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை இ.இ.எஸ்.எல். என்ற நிறுவனம் கடனாக வழங்க முன்வந்துள்ளது. பேட்டரி பஸ்களின் வடிவம், இயக்கப்படும் முறை ஆகியவற்றை பற்றி ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு விளக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலைப்பாதைகளில் அதிக சப்தம் இல்லாமல் பேட்டரி பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News