செய்திகள்

வரிஏய்ப்பு செய்தவர்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள்: பிரதமர் மோடி

Published On 2016-11-14 07:49 GMT   |   Update On 2016-11-14 07:49 GMT
ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள், வரிஏய்ப்பு செய்தவர்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று உத்தரபிரதேச மாநிலம் காசியாப்பூரில் ரெயில்வே இருப்பு பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் காசியாப்பூரில் ரெயில்வே இருப்பு பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். ரெயில்வே திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 9-வது பிரதமர் நான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கருப்பு பணத்தை ஒழிக்கவே மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள்.

ஆனால் வரி ஏய்ப்பு செய்த செல்வந்தர்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தூங்குவதற்கு தூக்க மாத்திரையை வாங்குகிறார்கள்.

ஏழை மக்களின் உழைப்பும், தியாகமும் வீணாகாது. அசவுகரியத்தை சந்திக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஊழலை ஒழிப்பதற்காக அவர் எதையும் தாங்குவதற்கு தயாராகவே உள்ளனர்.

ஊழலை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகும். 50 நாட்களுக்கு பிறகு எல்லாம் சரியாகி விடும்.

பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் கவலைப்படுவார்கள். முக்கிய பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Similar News