செய்திகள்

டெல்லியில் திறந்த வெளியில் மது அருந்திய 210 பேர் கைது

Published On 2016-11-13 14:29 GMT   |   Update On 2016-11-13 14:29 GMT
டெல்லியில் திறந்த வெளியில் மது அருந்திய 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீதும், மது அருந்தி தொல்லைகள் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்தது. மது அருந்தினால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதமும், மது அருந்து தொல்லை கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று ‘தீர்வைச் சட்டம்’ அடிப்படையில் டெல்லி அரசு அறிவித்தது.

இதனால் கடந்த 7-ந்தேதி முதல் டெல்லி அரசின் தீர்வைத்துறை கண்காணிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 7 நாட்களில் 210 பேரை கைது செய்துள்ளனர்.

மதுவால் சீரழியும் குடும்பத்திற்கு உதவும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும், முறைகேடாக திறந்த வெளியில் வைத்து மது அருந்துவதை தடுக்கும் வகையிலும் இந்த முடிவு டெல்லி அரசால் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 35 பேரும், நேற்று 26 பேரும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News