செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையை கொள்ளையடித்த பொதுமக்கள்

Published On 2016-11-13 05:47 IST   |   Update On 2016-11-13 05:47:00 IST
மத்திய பிரதேசத்தில் சில்லரை நோட்டுகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
சத்தர்பூர்:

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால், மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் மேற்படி நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர். ஆனால் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இந்த பணத்தை மாற்ற முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க சில்லரை இல்லாததால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூருக்கு அருகே உள்ள பர்தகா கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு இருந்தனர். சில்லரை நோட்டுகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் போலீசில் புகார் செய்தார்.

எனினும் இந்த சம்பவத்தை மறுத்துள்ள போலீசார், அந்த கடையில் கடந்த 4 மாதங்களாக பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடை ஊழியர்களிடம் லேசான தகராறில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

Similar News