செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மாலிக் 4 மாதங்களுக்கு பின் சிறையிலிருந்து விடுதலை

Published On 2016-10-30 00:23 IST   |   Update On 2016-10-30 00:23:00 IST
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக் 4 மாதங்களுக்கு பின் மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக் 4 மாதங்களுக்கு பின் மத்திய சிறையில் இருந்து  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் கடந்த ஜூலை 8ந்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து ஒரு சில மணிநேரங்களில் மாலிக்கை அவரது மைசூமா இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.  அதன்பின் கொத்திபாக் காவல் நிலையத்தில் வைத்திருந்த அவரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இரு ஹுரியத் மாநாட்டு அமைப்புகளின் தலைவர்களான உமர் பரூக் மற்றும் கிலானி ஆகியோருடன் இணைந்து மாலிக் தலைமையில் கடந்த 113 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.  இதில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.  உமர் பரூக் கடந்த 2 மாதங்களாக சேஷ்மஷாஹி துணை சிறையில் இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.  ஆனால் தொடர்ந்து அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.

Similar News