செய்திகள்

விஜய் மல்லையாவின் ஜெட் விமான விற்பனையை துரிதப்படுத்துங்கள்: சேவை வரித்துறைக்கு நீதிமன்றம் கெடு

Published On 2016-10-14 20:44 GMT   |   Update On 2016-10-14 20:44 GMT
விஜய் மல்லையாவின் ஜெட் விமானத்தை விற்பதற்கான நடைமுறையை துரிதப்படுத்தி, டிசம்பர் 15-ந் தேதிக்குள் விற்றுவிட வேண்டும் என சேவை வரித்துறைக்கு நீதிமன்றம் கெடு விதித்தனர்.
மும்பை:

தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன்பெற்றுக் கொண்டு லண்டனுக்கு தப்பி விட்டார். அத்துடன் சேவை வரித்துறைக்கும் பல கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார். இதனை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கிய சேவை வரித்துறையினர், அவரது ஜெட் விமானத்தை பறிமுதல் செய்தனர். இதனை ஏலம் விட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து 80 சதவீத தொகைக்கு ஏலதாரர் ஒருவர் கேட்டார்.

இதனால் ஏல நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர், மீண்டும் விஜய் மல்லையாவின் ஜெட் விமானத்தை ஏலம் விட அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் சேவை வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பி.பி.கொலப்வாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீங்கள் (சேவை வரித்துறை) நேரத்தை விரயப்படுத்துகிறீர்கள். விஜய் மல்லையாவின் ஜெட் விமானத்தை விற்பதற்கான நடைமுறையை துரிதப்படுத்தி, டிசம்பர் 15-ந் தேதிக்குள் விற்றுவிடுங்கள் என்று சேவை வரித்துறைக்கு கெடு விதித்தனர். பின்னர், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar News