செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

Published On 2016-10-14 14:48 GMT   |   Update On 2016-10-14 14:48 GMT
கர்நாடகாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சலூன் கட்டாயம் அமைக்க வேண்டும் என சித்தராமையா தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சலூன் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தலை கொள்ளாத முடி அடர்ந்த தாடியுடன் இருக்கும் நோயாளிகள் ஷேவ் செய்து முடி வெட்டிக் கொள்ளும்போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் விரைவில் நோயாளிகள் குணமடைவர் என்பது அரசின் எண்ணமாக உள்ளது.

முதற்கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்திட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தாடி வைத்திருக்கும் வெவ்வேறு மதத்துக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என்றும் நோயாளிகள் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Similar News