செய்திகள்

கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி கற்பழிப்பு - மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு

Published On 2016-09-21 12:34 IST   |   Update On 2016-09-21 12:34:00 IST
கேரள மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கால் பகுதியில் இரவு வேளையில் ஒருவீட்டுக்குள் நுழைந்த காமுகன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 90 வயது மூதாட்டியை கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியானது.

அந்த வீட்டின் அமைப்பைப் பற்றி நன்கு தெரிந்துவைத்திருந்த குற்றவாளி கத்தி முனையில் தன்னை மிரட்டி கற்பழித்ததாக அந்த மூதாட்டி தெரிவித்திருந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டி இந்த கற்பழிப்பு சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரியவந்துள்ள நிலையில் இதுதொடர்பாக, அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக, கடக்கால் பகுதி போலீசாரும் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வாக்குமூலத்தை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News