செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் 2 மாதங்களில் காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம்

Published On 2016-09-21 07:00 IST   |   Update On 2016-09-21 07:01:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தங்களது முடியினை காணிக்கை அளித்து வருகின்றனர். இதனால் உடனுக்குடன் திருப்பதில் கணிக்கை முடிகள் குவிந்து விடுகின்றன.

இந்த தலைமுடிக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அவ்வப்போது இ–ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள்.
வார விடுமுறை நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News