செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் ‘பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ உயிர்நீத்த வீரரின் மனைவி–மகள் மோடிக்கு வேண்டுகோள்

Published On 2016-09-19 23:36 GMT   |   Update On 2016-09-19 23:36 GMT
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என உயிர்நீத்த வீரரின் மனைவி–மகள் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கயா:

காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் சுனில் குமார் வித்யார்த்தி என்பவரும் ஒருவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு கிரண் தேவி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். ராணுவ முகாமில் சுனில் குமார் கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கடந்த 2 நாட்களாக மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தந்தை இறந்த தகவல் அறிந்தது முதல் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுதவாறே இருக்கும் அவரது 13 வயது மகள் ஆர்த்தி குமாரியை தேற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஆர்த்தி குமாரி, ‘மோடிஜி, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ என உருக்கமுடன் வேண்டிக்கொண்டார்.

சுனில் குமாரின் மனைவி கிரண் தேவி கூறுகையில், ‘ராணுவத்தினரை கட்டுப்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க இப்போதாவது அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தாக்குதலில் மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த கங்காதர் தொலுய் என்ற வீரரும் உயிரிழந்தார். தனது மகனின் சாவுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவரது தாய், மகனை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Similar News