செய்திகள்

காஷ்மீரில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம்: லல்லு நேரடி குற்றச்சாட்டு

Published On 2016-09-18 10:01 GMT   |   Update On 2016-09-18 10:01 GMT
காஷ்மீரில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள லல்லு பிரசாத் யாதவ், மோடியின் 56 அங்குல மார்பு எங்கே போனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்னா:

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாம் மீது இன்று 17 வீரர்களை பலிவாங்கிய தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பாட்னா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லல்லு பிரசாத் ராவ், ‘‘நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீர் நமது கைகளை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது. நடவடிக்கை எடுப்பதாக கூறிவரும் பிரதமர் மோடி, சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அவசரப்பட்டு எதிர்மறையாக செயல்பட்டு விடுகிறார்.

காஷ்மீரில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியானபோது, மோடியின் 56 அங்குல மார்பு எங்கே போனது? இது,மோடியின் அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News