செய்திகள்

ராஜ்நாத் சிங்கின் ரஷியா, அமெரிக்கா பயணம் ஒத்திவைப்பு

Published On 2016-09-18 03:22 GMT   |   Update On 2016-09-18 03:22 GMT
காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீரில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அவர் 5 நாள் பயணமாக இன்று (18-ந் தேதி) ரஷியாவுக்கு புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ரஷியாவின் உள்துறை மந்திரி விளாடிமிர் கொலோகோட்சேவ் உடன் பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் ஐ.எஸ். இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், வரும் 26-ந் தேதி ராஜ்நாத் சிங், அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், காஷ்மீரில் தீவிரவாதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சுமார் இருமாத காலமாக அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

Similar News