செய்திகள்

விமானத்திற்குள் ஊழியர்கள் செல்பி எடுக்கக்கூடாது: விமான போக்குவரத்து இயக்குனரகம் புது உத்தரவு

Published On 2016-09-16 05:07 GMT   |   Update On 2016-09-16 05:07 GMT
விமானத்திற்குள் ஊழியர்கள் செல்பி எடுக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

விமானத்திற்குள் முன் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏற்கனவே சட்டம் உள்ளது. இப்போது செல்போன், ஐபாட் என பல கருவிகளில் புகைப்படம் எடுக்கும் வசதிகள் உள்ளதால் பலரும் ‘செல்பி’ எடுத்துவருகிறார்கள். விமானத்தில் விமானிகளின் அறையில் சில விமானிகள் புகைப்படம் எடுப்பதால் அவர்களது கவனம் சிதறுவதாக தெரியவந்தது. சமீபத்தில் ஒரு பயிற்சி விமானத்தில் விமானி ‘செல்பி’ எடுத்தபோது விபத்தில் முடிந்தது.

இதனால் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை அனுப்பியது. அதில், எந்தவிதமான விமானத்திலும் விமானிகளோ, விமான ஊழியர்களோ புகைப்படம் எடுக்கக்கூடாது. பயணிகளும் விமானத்தில் ஏறும்போதோ, அல்லது இறங்கும்போதோ புகைப்படம் எடுக்கக்கூடாது. இதனை அனைத்து விமான நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Similar News