செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி உயர் பாதுகாப்பு பிரதிநிதிகள் ஆலோசனை

Published On 2016-09-16 03:13 GMT   |   Update On 2016-09-16 03:13 GMT
‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு தலைவர்களின் உச்சி மாநாடு, கோவாவில் அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிற இந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் குறித்து ஆலோசனை செய்வதற்காக ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பாதுகாப்பு உயர் பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

பயங்கரவாத ஒழிப்பில் ‘பிரிக்ஸ்’ நாடுகள் இணைந்து செயல்படுவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் பயங்கரவாத அமைப்புகள் ‘பிரிக்ஸ்’ நாடுகளில் இருந்து நிதி உதவியோ, ஆயுத உதவியோ பெற விடாமல் தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Similar News