செய்திகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு இரோம் சர்மிளாவை சந்தித்தார் அவரது தாயார்

Published On 2016-08-20 00:47 GMT   |   Update On 2016-08-20 00:47 GMT
உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதை தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு இரோம் சர்மிளாவை அவரது தாயார் நேற்று சந்தித்துள்ளார்.
இம்பால்:

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் சர்மிளா 9-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்–அமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். இரோம் சர்மிளாவின் இந்த அறிவிப்புக்கு மாநிலத்திற்கு வெளியே பெரும் ஆதரவு கிடைத்தாலும், மணிப்பூரில் ஆதரவும், எதிர்ப்பு கலந்த எதிர்வினை வெளிப்பட்டது.

இருப்பினும் ’ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிரான எனது போராட்டம் தொடரும்’ என்று இரோம் சர்மிளா ஏற்கனவே கூறி இருந்தார்.  

இந்நிலையில், உண்ணாவிரதத்தை முடித்துள்ள இரோம் சர்மிளாவை அவரது தாயார் சகி நேற்று(வெள்ளிக்கிழமை) திடீரென சந்தித்துள்ளார்.

இது குறித்து பேசிய இரோம் சர்மிளா, “16 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய தாயார் என்னை சந்தித்தது, எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எனது தாயாரும், சகோதரியும் என்னை வந்து சந்தித்தார்கள்” என்று கூறினார்.

Similar News