செய்திகள்

டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்துக்கு பிரமாண்ட புதிய கட்டிடம் விரைவில் திறப்பு

Published On 2016-08-18 06:10 GMT   |   Update On 2016-08-18 06:11 GMT
புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
புதுடெல்லி:

டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்துக்கு பிரமாண்டமான வகையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

டெல்லியில் அசோகா சாலையில் 11-வது எண் கட்டிடத்தில் பா.ஜனதா அலுவலகம் செயல்படுகிறது. இங்கு தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பிக்கள் போன்றோருக்கு போதுமான இட வசதி இல்லை. ஆலோசனை கூட்டங்கள் நடத்து வதற்கும் இடம் போதுமானதாக இல்லை.

இதையடுத்து பிரமாண்ட வகையில் புதிய கட்டிடம் கட்ட பா.ஜனதா தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லி தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் இந்த புதிய கட்டிடம் கட்ட 2 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். நிகழ்ச்சியில் மூத்த மத்திய மந்திரிகள், மூத்த பா.ஜனதா தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கட்டிடம் 3 பிளாக்குகளாக கட்டப்படுகிறது. முதல் இரண்டு பிளாக்குகளில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகிறது. 3-வது பிளாக் 7 மாடிகள் கொண்டதாக கட்டப்படும். இங்கு வை-பை வசதியுடன் 450 பேர் பங்கேற்கும் வகையில் மீட்டிங் ஹால், 50 பேர் பங்கேற்கும் மற்றொரு மீட்டிங் ஹால், தலைவர், எம்.பிக்கள், அலுவலக நிர்வாகிகளுக்கு 100 அறைகள் கட்டப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் விடியோ கான்பரன்சிங் வசதியும் செய்யப்படுகிறது.

2 ஆண்டில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்கவும் 2018-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி வாஜ்பாய் பிறந்த நாளில் திறப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News