செய்திகள்

சர்வதேச பொது மன்னிப்பு சபை மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

Published On 2016-08-16 11:19 GMT   |   Update On 2016-08-16 11:19 GMT
சர்வதேச பொது மன்னிப்பு சபையின்மீது தேசத்துரோகம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூர்:

சர்வதேச பொது மன்னிப்பு சபை கடந்த சனிக்கிழமை பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களே காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பக் காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதனால் சர்வதேச பொது மன்னிப்பு சபை மீது பெங்களூர் போலீசார் இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். தேசத்துரோகம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறும்போது, 'இந்த நிகழ்ச்சியின் உள்நோக்கம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள யுனைடெட் தியோலாஜிக்கல் கல்லூரி அருகே நடந்த இந்த நிகழ்ச்சியை சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News