செய்திகள்

126 வழக்கறிஞர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை: இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு

Published On 2016-08-16 07:48 GMT   |   Update On 2016-08-16 07:48 GMT
126 வழக்கறிஞர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

வழக்கறிஞர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஜூலை 25-ம் தேதி உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவித்த நிலையில், புதிய விதிகளை திரும்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து இந்திய பார் கவுன்சில் கடந்த மாதம் 24-ம் தேதி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், 126 வழக்கறிஞர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இந்திய பார் கவுன்சில் இன்று உத்தரவிட்டுள்ளது.

22-ம் தேதிக்கு பிறகு தடையை முழுவதுமாக நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதற்குள் 126-பேரின் நன்னடத்தை உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டுமென்றும் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இந்திய பார்கவுன்சில் தலைவர் மிஸ்ராவை தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர்கள் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News