செய்திகள்

2017 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2016-05-22 23:29 IST   |   Update On 2016-05-22 23:29:00 IST
அடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆத் ஆத்மி போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு கோவா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை போல் கோவா மாநிலத்திலும் போட்டியிடுவதை ஆம் ஆத்மி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

கோவா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்தார்.

Similar News