செய்திகள்

டீ விற்பவரின் மகன் என்பதால் மாணவனை நீக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை

Published On 2016-05-07 15:02 IST   |   Update On 2016-05-07 15:02:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டீ விற்பவரின் மகன் என்பதால் மாணவனை நீக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பட் மாவட்டத்திற்குட்பட்ட பரவுட் பகுதியில் சுவாமி மஹாவீர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்த அரிஹந்த் ஜெயின் என்பவரின் தந்தை தெருக்களில் டீ வியாபாரம் செய்பவர் என்பது தெரியவந்ததால் சமீபத்தில் அவனை பள்ளியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவல்கள் வெளியானதும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் தலைமையில் குழுவை அமைத்து பக்பட் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Similar News