செய்திகள்

கேரளாவில் தலித் மாணவி கற்பழிப்பில் காதலன் உள்பட 3 பேர் கைது

Published On 2016-05-07 04:57 IST   |   Update On 2016-05-07 06:02:00 IST
கேரளாவில் தலித் மாணவி கற்பழிப்பில் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், வர்கலா மாவட்டம் அயனாரா என்னும் கிராமத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி ஒருவரை கடந்த 3-ந்தேதி அவருடைய காதலனும், இன்னும் இருவரும் சேர்ந்து ஒரு ஆட்டோவில் கடத்திச் சென்றனர். அயாந்தி என்னுமிடத்தில் அந்த மாணவியை கற்பழித்தனர். காயங்களுடன் மயங்கி நிலையில் கிடந்த அந்த மாணவியை உள்ளூர்வாசிகள் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசிலும் அவர்கள் புகார் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த மாணவி கற்பழிக்கப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவரும், மாணவியின் காதலனுமான ஷிஜூ, நண்பர்கள் சபீர், ரஷீத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவர் மீதும் 376(2) பிரிவின் கீழ்(கும்பலாக கற்பழித்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் என்னும் இடத்தைச் சேர்ந்த 30 வயது சட்டக் கல்லூரி தலித் மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News