செய்திகள்

பீகாரில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இன்று தர்ணா போராட்டம்

Published On 2016-04-25 08:31 IST   |   Update On 2016-04-25 08:31:00 IST
கள்ளுக்கு விதித்த தடையை மாநில அரசு விலக்க வலியுறுத்தி கார்டன்பாக் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்து உள்ளார்.
பாட்னா :

பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் அமல்படுத்தி உள்ளார். அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் பொதுஇடத்தில் கள் விற்பனைக்கும் அவர் தடை விதித்து உள்ளார். இதற்கு மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாகவும் கள்ளுக்கு விதித்த தடையை மாநில அரசு விலக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) பகல் 2 மணி அளவில் கார்டன்பாக் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்து உள்ளார்.


Similar News