செய்திகள்
பாராளுமன்ற கூட்டத்தொடரில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்
உத்தரகாண்ட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தொடங்கி மார்ச் 16-ந்தேதி வரை நடந்தது. இந்த தொடரின் போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது சம்பவம், விஜய் மல்லையா கடன் மோசடி, அருணாச்சல பிரதேச அரசியல் விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
இதனால் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், பாராளுமன்ற தொடர் பெரும்பாலும் சுமுகமாக நடந்தது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரிலும் பல்வேறு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை திருத்த மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதுடன், 2 அவசர சட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் விவகாரம் மீது தொடரின் முதல் நாளான இன்றைக்கே விவாதம் நடத்துவதற்காக மேல்-சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீசு அளித்துள்ளது. இதற்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதாதளம் போன்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதுதவிர வறட்சி மேலாண்மை, இஸ்ரத் ஜகான் வழக்கு, பதன்கோட் தீவிரவாத தாக்குதல், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு அரசுக்கு எதிராக பிரச்சினைகளை அடுக்கும் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகி வருகிறது. குறிப்பாக இஸ்ரத் ஜகான் வழக்கில் சோனியா, ராகுல் காந்தியின் தலையீடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின் போது பல்வேறு மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக காங்கிரசை மடக்கவும் மத்திய அரசும் திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசும் வரிந்து கட்டுவதால், இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மசோதாக்கள் நிறைவேறுவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு காங்கிரசுக்கு பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது. மேலும் இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.