செய்திகள்

சாலை விபத்துகளை பாதியாக குறைக்க நடவடிக்கை: நிதின் கட்காரி

Published On 2016-04-25 01:58 IST   |   Update On 2016-04-25 01:57:00 IST
சாலை விபத்துகளை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாக்பூர்:

மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நடக்கும் 5 லட்சம் விபத்துகளில், சுமார் 1½ லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த எண்ணிக்கையை பாதியாக, அதாவது 50 சதவீதமாக குறைக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாலை விபத்துகளில் பலத்த காயம் அடைந்து மரணத்தை தழுவி, தங்களது குடும்பத்தினரை பல்வேறு இன்னல்களிலும், இடையூறுகளிலும் விட்டு செல்வதை நினைக்கும் போது எனக்கு மனவலி ஏற்படுகிறது.

அதிகப்படியான விபத்துகளை கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. இதனை எதிர்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

விபத்தே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். இது தான் எங்களுடைய கனவு. போக்குவரத்து நெருக்கடியும் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாகிறது.

இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.

Similar News