இந்தியா

மூடுபனியால் நிகழ்ந்த கோர விபத்து- பைக் மீது லாரி மோதி இருவர் பலி

Published On 2023-01-10 18:05 IST   |   Update On 2023-01-10 18:05:00 IST
  • அடர்ந்த பனி மூட்டத்தால் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது
  • நடைபாதையில் தூங்கியவர்கள் மீது பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாலியா:

வடமாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி நிலவுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் - பாலியா நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடு பனிக்கு மத்தியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் திங்கள்கிழமை இரவு நர்லா என்ற கிராமத்திற்கு அருகில் நடந்தது.

இதேபோல் டெல்லியின் ரோத்தக் சாலை சராய் ரோகிலா ரெயில் நிலையம் அருகே, நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த டெல்லி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பிரேக் பிடிக்காததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி விபத்துக்குள்ளானதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News