இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி - 18 ரெயில்கள் ரத்து

Published On 2023-06-02 21:13 GMT   |   Update On 2023-06-02 21:13 GMT
  • ஒடிசாவின் பாலசோர் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
  • இதில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இதில் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 2 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.

இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரெயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஹவுரா-பூரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை மெயில் உள்ளிட்ட 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 7 ரெயில்கள் டாடா நகர் ரெயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News