இந்தியா
சபரிமலையில் தரிசனம் செய்ய இருமுடி கட்டி புறப்பட்ட 101 வயது மூதாட்டி
- தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்டார்.
- கடந்த ஆண்டு பாருக்குட்டி தனது 100 வயதில் முதல்முறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார்.
வயநாடு:
வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதியை சேர்ந்தவர் பாருக்குட்டி (வயது 101). இவர் தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்டார்.
முன்னதாக அவர் கோனேரி நாராயண குரு சண்முகா கோவிலில் நெய், தேங்காய் மூலம் இருமுடி கட்டினார். கடந்த ஆண்டு பாருக்குட்டி தனது 100 வயதில் முதல்முறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது வயது முதிர்வை கருத்தில் கொண்டு போலீசார், தேவசம்போர்டு அதிகாரிகள் கூட்டத்தில் சிக்கி விடாமல் தரிசனம் செய்ய வைத்தனர். இதனால் இந்தமுறை நான் சபரிமலை செல்ல விரும்புகிறேன் என்று பாருக்குட்டி தெரிவித்தார். அவர் சபரிமலை ஏறி கூட்டத்தில் நிற்காமல் தரிசனம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுக்க பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.