இந்தியா

மகர சங்கராந்தி விழாவில் கடும் நெரிசல்- ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

Published On 2023-01-14 22:06 IST   |   Update On 2023-01-14 22:06:00 IST
  • இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கோயிலுக்கு வருகை தந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

கட்டாக்:

ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் படம்பாவில் உள்ள சிங்கநாத் கோவிலில், மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்வதற்கு படகு வசதி இல்லாததால், கோவிலை இணைக்கும் கோபிநாத்பூர்-படம்பா டி பாலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கோயிலுக்கு வருகை தந்ததால் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News