செய்திகள்

மலிவு விலையில் தயாராகும் பாரத் 1: விலை மற்றும் முழு தகவல்கள்

Published On 2017-04-12 05:17 GMT   |   Update On 2017-04-12 05:18 GMT
மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து அந்நிறுவனம் பாரத் 1 மொபைல் போன் சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பாரத் 1 எனும் மொபைல் போனினை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாரத் 2 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டதை போன்று, பாரத் 1 மொபைல் போனிலும் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அடுத்த நான்கு வாரங்களில் பாரத் 1 மொபைல் போன் விற்பனைக்கு வரும் என மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஷூபாஜித் சென் தெரிவித்திருந்தார். தற்சமயம் வரை இந்த மொபைல் போன் குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த போன் ஜாவா சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. 

மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட பாரத் 2 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்படாத நிலையில் இதன் ஆன்லைன் விலை ரூ.2,999 முதல் ரூ.3,499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



சிறப்பம்சங்களை பொருத்த வரை பாரத் 2 ஸ்மார்ட்போனில் 4.0 இன்ச் 800x480 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்போனேட் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர், 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள பாரத் 2 ஸ்மார்ட்போனில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 0.3 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 1300 எம்ஏஎச் திறன் மற்றும் 4ஜி வோல்ட்இ, டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத் 4.0, வை-பை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Similar News