- அடுத்து இராமாயண காலத்தில் இந்த உலகத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் இருந்தவர்கள் இடையே போர்.
- மற்ற யுகங்களில் நடந்த போரில் யாரோ யாரையோ கொன்றனர்.
கலியுகம் என்ற உடனே அழிவு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடிய ஒன்றாக சித்தரிக்க படுகிறது !
அப்போ இதற்கு முன்னே இருந்த யுகங்கள் எப்படி ? அதில் அழிவில்லையா ?
அதற்கும் இப்போது நடக்கும் கலியுகத்திற்கும் என்ன வித்தியாசம் ?
பொதுவாக நல்லவை தீயவை குறித்த போராட்டங்களே யுகங்களாக சித்தரிக்க பட்டன. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான போராட்டங்களே போர்களாக சித்தரிக்க பட்டன.
அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே போர் என சித்தரிக்கப்பட்டது. முதலில் ஏதோ ஓர் உலகத்தில் நல்லவர்கள்- தீயவர்கள் தேவர்கள் அசுரர்கள் இடையே போர்..
அடுத்து இராமாயண காலத்தில் இந்த உலகத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் இருந்தவர்கள் இடையே போர். அடுத்து மஹாபாரத காலத்தில் ஒரே வீட்டில் பிறந்தவர்கள் ( நல்லவர்கள் / கெட்டவர்கள் ) இடையே போர்.
இப்போது இந்த கலியுகத்தில் இந்த நல்லவர்களும் தீயவர்களும் (தேவர்கள் / அசுரர்கள்) வெளியே இல்லை. நம்முள்ளே தான் இருக்கிறார்கள். அந்த போரே மனப்போராட்டமாக நம்முள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
மற்ற யுகங்களில் நடந்த போரில் யாரோ யாரையோ கொன்றனர். இப்போது நடக்கும் கலியுகத்தில் நாம் நமக்குள்ளேயே போரிட்டு மரணிக்கிறோம்.
-வான்கடந்தான்