கதம்பம்

வயதுக்கேற்ற தூக்கம்...

Published On 2023-04-05 17:44 IST   |   Update On 2023-04-05 17:44:00 IST
  • தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.
  • மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

தினசரி யாருக்கு, எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் படி,

3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம்,

4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம்,

1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம்,

3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம்,

6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம்,

13 - 18 வயது வரையுள்ள வளிரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம்

மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.

தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, தூக்க நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, தூங்கும் அறையில் அதிகளவு வெளிச்சம் அல்லது சத்தம் இருத்தல் போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். காஃபீன், நிக்கோட்டின், மது போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

உளவியல் பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா, மனச்சோர்வு நோய், இருமல் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

-எம். எஸ். சீதாராமன்

Tags:    

Similar News