கதம்பம்
null

சிவன் சொத்து..

Published On 2024-03-01 10:45 GMT   |   Update On 2024-03-01 10:46 GMT
  • பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம்.
  • ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். இதற்கு பொதுவான விளக்கம் சிவன் கோவில் சொத்தை அபகரித்தால் குலம் நாசம் என்பதாகும்.

இந்து சமயத்தில் பெருமாள், சிவன், என இரு பெரும்தெய்வங்கள் உண்டு. இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள், ஆடை ஆபரணங்கள், நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தரித்து உடலில் சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசிக்கோலத்தில் இருப்பார்.

பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர் மீது பக்திகொண்டு மக்கள்வழிபட்டு அவரிடம் கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவதுதான் நிதர்சனம். அவருடைய அலங்காரம் அப்படி.

பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம். ஆனால் ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

சிவன் சொத்து எனப்படுவது திருநீறும் ருத்ராட்சமுமே. இதை அணிந்தால் அவரது குலம் நாசமாகும். அதாவது அவரது பாவங்கள் அனைத்தும் நாசமாகும். இதனால் அவரது மறுபிறப்பும் நாசமாகும். அவரால் அவரது வம்சமே பிறவிக்கடலில் இருந்து மீண்டு....பிறவாநிலையை அடைவர். இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் பொருளாகும்.

-ஆர்.எஸ். மனோகரன்

Tags:    

Similar News

இலவசம்