கதம்பம்
- மனம் ஒரு போதும் அமைதியாக இருக்க முடியாது.
- மனம் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது.
மக்கள் என்னிடம் வந்து, "அமைதியான மனதை எப்படி அடைவது?" என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் சொல்கிறேன்,
"அப்படி எதுவும் இல்லை. அமைதியான மனதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. "
மனம் எப்போதும் அமைதியாக இருக்காது;
மனம் இல்லை என்பதே அமைதி.
மனம் ஒரு போதும் அமைதியாக இருக்க முடியாது.
மனதின் இயல்பே பதட்டமாக இருப்பது.,
குழப்பத்தில் இருப்பது தான்..
மனம் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது.
அது தெளிவைக் கொண்டிருக்க முடியாது,
ஏனென்றால் மனம் என்பது குழப்பம்.
மனம் இல்லாமல் தெளிவு சாத்தியம்,
மனம் இல்லாமல் அமைதி சாத்தியம்;
மனம் இல்லாமல் அமைதியாக இருப்பது சாத்தியம்,
எனவே அமைதியான மனதை அடைய முயற்சிக்காதீர்கள்.
அப்படி நீங்கள் செய்தால், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் சாத்தியமற்ற பரிமாணத்தில் நகர்கிறீர்கள் என்று அர்த்தம்.
-ஓஷோ