- நீங்கள் புதியதாக கட்டிய வீட்டிற்கு சென்றாலும் சரி.. வாடகை வீட்டிற்கு சென்றாலும் சரி.. அந்த வீட்டில் முதன்முதலாக பாலை தான் காய்ச்ச வேண்டும்.
- பசுமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பாலை காய்ச்சினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
புதிய வீட்டிற்கு குடி செல்லும் முன் பால் காய்ச்சுவது ஏன்?
பொதுவாக நாம் புதியதாக ஒரு வீட்டிற்கு குடி செல்லும்போது முதலில் பால் காய்ச்சுவோம். பின்பு தான் மற்ற பொருட்களை வீட்டிற்குள் கொண்டு செல்வோம்.
புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கும் பொழுது இருகரங்களையும் கூப்பி கடவுளை வணங்க வேண்டும். பின் அந்த பாலை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
நீங்கள் புதியதாக கட்டிய வீட்டிற்கு சென்றாலும் சரி.. வாடகை வீட்டிற்கு சென்றாலும் சரி.. அந்த வீட்டில் முதன்முதலாக பாலை தான் காய்ச்ச வேண்டும். அதிலும் பசுமாட்டு பாலை காய்ச்சினால் சிறந்தது என்று கூறுவார்கள்.
ஏனெனில், முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கின்ற பசுமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பாலை காய்ச்சினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். அதுவே காலப்போக்கில் பாக்கெட் பாலை காய்ச்சும் நிலைக்கு வந்துவிட்டது.
லட்சுமி வாசம் செய்யும் பசுமாட்டில் இருந்து கறந்த பாலை கொண்டு, புது வீட்டில் பால் காய்ச்சும் பட்சத்தில், அந்த வீட்டில் இருக்கக்கூடிய துர்தேவதைகள் கூட நல்ல தேவதைகளாக மாறிவிடுவார்கள். இதற்காக தான் முதலில் பாலை காய்ச்ச வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
- சுசிலா ரெங்கநாதன்