கதம்பம்

மனம் ஆசை கற்பனை

Published On 2024-01-21 15:45 IST   |   Update On 2024-01-21 15:45:00 IST
  • பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.
  • என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.

அந்த ஏழை விவசாயி தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே தொங்கி கொண்டிருக்கும் தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே..

ஒரு நாள்... இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும். அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்..

கஞ்சி விற்ற காசில் கோழிகள் வாங்கி வளர்ப்பேன்..

சில மாதங்களில் கோழிகள் நிறைய பெருகியவுடன்... கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்...

ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்...

மாடுகளை பெருகியவுடன்... மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்...

பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்...

ஊரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர்... தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்.

எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...

அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்...

மாடியிலிருந்து... என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்..

அப்போது அவன் சேட்டை செய்வான்..

பிறகு கீழே சென்று அவளை பார்த்து...

"ஏய்..! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ... என்று...கம்பால் ஓங்கி அடிப்பேன்.." என்று அடித்தான்...

அடித்தவுடன்...கஞ்சிகலயம் உடைந்து அவன் முகத்தில் கொட்டியது ..

வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்...

மனதின் மாறுபாடுகளில் "கற்பனை"யும் ஒன்று.

-ஓஷோ.

Tags:    

Similar News