கதம்பம்

தேன் கலந்து சாப்பிடுவோம்!

Published On 2023-09-26 04:15 IST   |   Update On 2023-09-26 04:15:00 IST
  • எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
  • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

தேனை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்..

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்பெறும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்குறையும்.

-நெல்லை மணித்தேவன்

Tags:    

Similar News