கதம்பம்
null

வரலாறு விசித்திரமானது!

Published On 2023-09-12 16:56 IST   |   Update On 2023-09-12 17:32:00 IST
  • ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.
  • ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார்.

'என்டர் த டிராகன்' படம் மூலம் தான் ப்ரூஸ் லி உலகப்புகழ் பெற்றார். அதற்குமுன் ஹாலிவுட்டில் அவர் ஊர், பேர் தெரியாத ஹீரோ. ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.

ஆனால் ஹாலிவுட்டில் அவரை யாருக்கும் தெரியாது. ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார். இந்த சூழலில் திடீர் என தன் 32வது வயதில் மரணமும் அடைந்தார்.

அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து 'என்டர் த டிராகன்' வெளியானது. அது அத்தனை பெரிய வெற்றி பெறும் என யாருக்கும் தெரியாது. சும்மா எட்டரை லட்சம் டாலர் செலவில் எடுத்தார்கள். 20 கோடி டாலர் வசூல் செய்தது. அமெரிக்கா என இல்லை, திரையிட்ட நாடுகளெங்கும் வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி.

"யார் இந்த ப்ரூஸ் லீ?"  ஹாலிவுட் பதறியடித்தபடி அவரது கால்ஷீட்டுக்கு அலைய, அவர் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது.

அதன்பின் அவரது பழைய சீன படங்களை வாங்கி "ரிட்டர்ன் ஆஃப் த டிராகன், பிஸ்ட் ஆப் பியூரி" என டப்பிங் பண்ணி ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அனைத்தும் அதிரி புதிரி வெற்றி.பாக்ஸ் ஆபிஸ் அதிர்ந்தது.

தான் இத்தனை பெரிய சூப்பர்ஸ்டார் ஆனது தெரியாமல் மண்ணுக்குள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார் ப்ரூஸ் லி.

வரலாறுதான் எத்தனை விசித்திரமானது?

-நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News