கதம்பம்

அழகான பதில்!

Published On 2024-03-12 10:46 GMT   |   Update On 2024-03-12 10:46 GMT
  • நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
  • துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.

துபாயை இன்றைய நிலைக்கு கொண்டு வந்த ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிடம் துபாயின் எதிர்காலம் குறித்து கேட்டபோது அவர் கூறிய வார்த்தைகள்...

"எனது அப்பாவும், அப்பாவின் அப்பாவும் ஒட்டகங்களில் பயணம் செய்தவர்கள்.

இன்று நான் பென்ஸிலும், எனது மகன்கள் மற்றும் பேரன்கள் லேண்ட் ரோவரிலும் பயணம் செய்கிறோம்.

ஆனால் என் பேரன்களின் குழந்தைகள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

ஏன் என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதிலளித்தார்...

நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.. அந்த அறிவே என்னை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது...

ஆனால் என் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அந்த கஷ்டங்களை பார்த்ததில்லை..

துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.. அது எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனை அவனுக்கு ஏற்படுத்துகிறது.

ஆனால் என் பேரக்குழந்தைகள் போன்ற இன்பத்தை மட்டும் அனுபவிப்பவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது கடினம். அவர்கள் விரைவில் சோர்வடைவார்கள்.

துன்பம் வரும்போது இன்ப உலகில் வாழ்ந்தவன் பலவீனமடைகிறான். என் பேரப்பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அவர்கள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்…"

என்ன அழகான பதில்...

Tags:    

Similar News

தம்பிடி