கதம்பம்

ஆசிரியரை மடக்கிய மாணவர்!

Published On 2024-02-09 11:45 GMT   |   Update On 2024-02-09 11:45 GMT
  • மன்னிக்கவும், மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.
  • உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,'உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?' என்று..

ஒரு மாணவன், ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

மாணவன் அமைதி காக்கிறான்.. சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்..

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: ஆம், இருக்கிறது.

மாணவன்: மன்னிக்கவும், மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

-அகரமுதல்வன்

Tags:    

Similar News

தம்பிடி