கதம்பம்
null
உங்க கிட்ட இருந்து தான் எடுக்கிறேன்...
- ஒரு தகவல்-ன்னு தினமும் சொல்றியே! இதெல்லாம் எங்கேயிருந்து எடுக்கறே?
- "ஐயா! உங்க பாக்கெட்டிலிருந்து எடுக்கறேன்னு சொல்றேன்.
ஒரு நிகழ்ச்சிக்காக வானொலி நிலையத்துக்கு
வந்திருந்த திருக்குறள் முனுசாமி ஒலிப்பதிவு
முடிந்து புறப்பட்டபோது தென்கச்சி சாமிநாதனை
அருகில் அழைத்து "இன்று ஒரு தகவல்-ன்னு தினமும் சொல்றியே! இதெல்லாம் எங்கேயிருந்து எடுக்கறே?" என்று கேட்டார். பட்டென்று "உங்க பாக்கெட்டிலிருந்துதான் ஐயா எடுக்கறேன்" என்று சொன்னார் தென்கச்சி.
"அது எப்படி?
"நீங்க பேசற கூட்டத்துக்கெல்லாம் தவறாம வந்துடுவேன், உங்க பேச்சைக் குறிப்பு எடுத்துக்குவேன். அதையெல்லாம் கொஞ்சம் மாத்தி ரேடியோவுல சொல்லிடுவேன்."
திருக்குறள் முனுசாமி சிரித்தார்.
"ஐயா! உங்க பாக்கெட்டிலிருந்து எடுக்கறேன்னு சொல்றேன். உங்களுக்குக் கோவம் வரலியா?"
"அது எப்படி வரும்? நானும் வேற எவன் பாக்கெட்டிலயோ இருந்துதானே எடுத்து என் பாக்கெட்ல வெச்சிக்கிறேன்?" என்று மீண்டும் திருக்குறள் முனுசாமி சிரித்தார்.
-சந்திரன் வீராசாமி