- மரியாதை என்பது உண்மையில் பயமே, அது மரியாதையே அல்ல, அது அர்த்தமற்றது.
- ஆசிரியர், உங்கள் வேலைக்காரர் மற்றும் கிராமத்துவாசி எல்லோருமே ஒன்றுதான்.
மரியாதைக்கும் அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு முக்கியத்துவம் கொண்ட மனிதர் வருகைதரும்போது, ஒரு மந்திரியோ அல்லது கவர்னரோ வரும்போது எப்படி எல்லோரும் அவரை வணங்குகிறார்கள் என்பதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?
நீங்கள் அதை மரியாதை என்கிறீர்கள், இல்லையா? ஆனால் அப்படிப்பட்ட மரியாதை போலித்தனமானது. ஏனெனில் அதன் பின்னணியில் பயம், பேராசை உள்ளது.
நீங்கள் அவரிடமிருந்து எதையோ பெற விரும்புகிறீர்கள், ஆகவே நீங்கள் அவர் கழுத்தில் மாலை அணிவிக்கிறீர்கள்.
அது மரியாதை ஆகாது, அது வெறுமனே நீங்கள் மார்க்கெட்டில் வாங்க விற்க பயன்படுத்தும் நாணயம் ஆகும்.
நீங்கள் உங்கள் வேலைக்காரரிடம் அல்லது கிராமவாசியிடம் மரியாதைக் காட்டுவதில்லை, ஆனால் அவர்களிடமிருந்து நமக்கு ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கைத் தருபவர்களுக்கு மரியாதைச் செய்கிறீர்கள்.
அப்படிப்பட்ட மரியாதை என்பது உண்மையில் பயமே, அது மரியாதையே அல்ல, அது அர்த்தமற்றது.
ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே அன்பு இருக்கும் என்றால், அப்போது உங்களுக்கு மந்திரி, ஆசிரியர், உங்கள் வேலைக்காரர் மற்றும் கிராமத்துவாசி எல்லோருமே ஒன்றுதான்.
அப்போது நீங்கள் அவர்கள் எல்லோரிடமும் மரியாதை காட்டுவீர்கள், அவர்கள் எல்லோருடனும் உணர்வுடன் இருப்பீர்கள், ஏனெனில் அன்பு பதிலுக்கு எதையுமே கேட்பதில்லை.
-தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி.