கதம்பம்

அந்த விளையாட்டு வேண்டாம்!

Published On 2024-07-16 14:52 IST   |   Update On 2024-07-16 14:52:00 IST
  • குத்துச்சண்டையை தொழிலாகக் கொள்வதற்கு பல தியாகங்களை செய்ய வேண்டும்.
  • குத்துச்சண்டை உலகில் நீதான் எப்பொழுதும் எல்லோரையும் முந்தி இருக்கவேண்டும்.

மைக் டைசன் கூறுகிறார்:

"என்னுடைய மூத்த மகன் ஒரு நாள் என்னிடம் சொன்னான்,

"அப்பா.. நானும் உன்னைப்போல ஒரு முழுநேர குத்துச்சண்டை வீரனாக ஆசைப்படுகிறேன் .." என்று.

நான் சொன்னேன்…

"மகனே, உன்னால் குத்துச்சண்டை போட முடியாது. ஏனென்றால், நீ ஒரு புகழ் பெற்ற பள்ளியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறாய். உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறாய். உன்னால் ஒரு சண்டைக்காரனாக முடியாது.

யாருடன் சண்டை போட்டு வெல்ல விரும்புகிறாய்?

என்னைப் போன்ற மனிதர்களுடனா? நாங்கள் விலங்குகள். மனிதர்கள் அல்ல.

என் பிள்ளை அந்த வாழ்க்கைக்குள் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது.

அது முன்னேற்றம் இல்லை. உன் தரத்தை தாழ்த்திக்கொள்ளும் செயலாகும்.

உன்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் நீ குத்துச்சண்டையை தேர்ந்தெடுக்கலாம்.

குத்துச்சண்டையை தொழிலாகக் கொள்வதற்கு பல தியாகங்களை செய்ய வேண்டும். வலிகளை, துயரங்கள் அனுபவிக்க வேண்டும்.

அடிகளையும் குத்துக்களையும் நான் தாங்கிக்கொண்டது என் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக. தமக்குப் பிடித்த நல்ல தொழில்களைச் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக..

ஆனால் குத்துச்சண்டை உலகில் நீதான் எப்பொழுதும் எல்லோரையும் முந்தி இருக்கவேண்டும். எப்பொழுதும் மற்றவரை முன்னேற அனுமதிக்கும் மனப்பான்மை இருக்கக் கூடாது. அது ஒருவர் மனதை அழுத்தும் எவ்வளவு பெரிய பாரம் என்று எனக்கு தெரியும். அந்த பாரத்தை நீ சுமக்க வேண்டாம் மகனே…"

-சுந்தரம்

Tags:    

Similar News