கதம்பம்
null

விசில் மொழி

Published On 2024-06-05 10:30 IST   |   Update On 2024-06-05 13:48:00 IST
  • நாடுகளில் உள்ள சில மக்கள் இனங்கள், இப்படி சீழ்க்கை மொழியில்தான் பேசுகிறார்கள்.
  • விசில் மொழிகளை, இசையுடன் கலந்த மொழி என்று சொல்லலாம்.

உலக அளவில் இன்றும் எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் சமூகங்களில் மொழிக்குப் பதிலாக, அதாவது சொற்களுக்குப் பதிலாக ஒருவித சீழ்க்கை, சீட்டி (விசில்) மொழி இருக்கிறது.

துருக்கி, ஸ்பெயின், பிரான்ஸ், மெக்சிகோ, சீனா, கேமரூன், மொசாம்பிக், நேபாளம் உள்பட பல்வேறு நாடுகளில் இந்த விந்தையான விசில் மொழிகள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.

'அண்ணன் கண்ணிலேயே பேசுவன்டா' என்று பருத்திவீரன் படத்தில், குட்டிச்சாக்கிடம் பருத்தி வீரன் பெருமையடிப்பார் இல்லையா?

அந்தமாதிரி, இந்த நாடுகளில் உள்ள சில மக்கள் இனங்கள், இப்படி சீழ்க்கை மொழியில்தான் பேசுகிறார்கள்.

கரடுமுரடான மலை முகடுகள் நிறைந்த பகுதிகள், அடர்ந்த காடுகளில் இந்த சீழ்க்கை மொழிகள் நன்றாகக் கைகொடுக்கும். 120 டெசிபல், 1.4 Khzல், பேசும் வார்த்தைகளைவிட பத்து மடங்கு அதிக தொலைவுக்கு இந்த விசில் மொழி விறுவிறுவென போய்ச்சேரும்.

அட்லாண்டிக் கடலின் கேனரித் தீவில் சில்போ கோமெரா என்ற விசில் மொழி, தென்மேற்கு பிரான்ஸ்சில் லாருன்ஸ் பகுதியில் ஒரு விசில் மொழி. கிரீஸ் நாட்டில் ஆண்டினா பகுதியில் உள்ள ஸ்பெரியா என்ற விசில்மொழி எல்லாம் மிகவும் புகழ்பெற்றவை.

ஆசிய நாடுகளான வியத்நாம், தாய்லாந்தில் கூட விசில்மொழிகள் இருக்கிறதாம்.

இந்த விசில் மொழிகளை, இசையுடன் கலந்த மொழி என்று சொல்லலாம். அல்லது மொழியுடன் கலந்த இசை என்றும் சொல்லலாம்.

-மோகன ரூபன்

Tags:    

Similar News