கதம்பம்

மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்?

Published On 2024-05-24 10:04 GMT   |   Update On 2024-05-24 10:04 GMT
  • பெரிய பணக்காரர் ஆனதும் பெரியவருக்கும் மகனுக்கும் சொத்து பணம் குறித்து கருத்து வேறுபாடு.
  • பெரியவர் மகனுக்கு ஒரு கழுதை குட்டியையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து துரத்தி விட்டார்.

ஒரு பெரியவரும் மகனும் ஒரு மகான் சமாதியை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

சுத்தமாக பராமரித்தார்கள். வேறு எந்த வேலையும் இல்லாததால் அங்கேயே இருந்து நன்றாக பராமரித்தார்கள்.

மகானின் புகழ் பரவ ஏராளமான கூட்டம்.

காணிக்கை குவிந்தது.

பெரிய பணக்காரர் ஆனதும் பெரியவருக்கும் மகனுக்கும் சொத்து பணம் குறித்து கருத்து வேறுபாடு.

பெரியவர் மகனுக்கு ஒரு கழுதை குட்டியையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து துரத்தி விட்டார்.

மகன் வேறொரு ஊரில் வந்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

கழுதை குட்டியை கொன்று புதைத்து, கையில் இருக்கும் பணத்தை கொண்டு சமாதி எழுப்பி, மகானின் சமாதி என்று கூறி எல்லோரையும் நம்ப வைத்தான்.

கூட்டம் வர ஆரம்பித்தது. புகழ் பரவியது.

அவனும் விரைவில் பணக்காரன் ஆகி விட்டான்.

கேள்விப்பட்ட பெரியவர் அவனை வந்து பார்த்து எப்படி இந்த வளர்ச்சி என்று கேட்டார்.

மகனும் உண்மையை சொன்னான். கழுதை குட்டி தான் இங்கே மகான் என்று சொல்லி சிரித்தான்.

பெரியவரும் சிரித்தார். அங்கே என் சமாதியில் இருப்பது இந்த கழுதை குட்டியின் தாய்தான் என்றார்.

மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்..?

யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள் சுய சிந்தனை இல்லாமல்.

ஓஷோவின் இக்கதையை சுவைபட சொன்னவர் தென்கச்சி சுவாமிநாதன்.

Tags:    

Similar News

ஹலோ..ஹலோ..!
அப்படியா..?