கதம்பம்

இது என்ன கூத்து?

Published On 2024-05-11 16:48 IST   |   Update On 2024-05-11 16:48:00 IST
  • ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.
  • அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.

இரண்டாம் உலகப்போரின் போது இது நிகழ்ந்தது.

போரிட நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள்.

அதனால் எல்லா வகையான ஆட்களும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

தாய் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்.

தந்தை நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று பல தளங்களில் தலைவர்களும் தளபதிகளும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த அமளியில் ஒரு தத்துவப் பேராசிரியரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

முதல்நாள் வீரர்கள் மைதானத்தில் கூடினார்கள்.

ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.

அட்டென்ஷன்...

அபௌட்டார்ன்....

லெப்ட்...

ரைட்....

லெப்ட்..

ரைட்...

அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.

மிகவும் கோபமாக அந்த சிப்பாயிடம் கேட்டார், நீ என்ன செய்கிறாய்?

முதலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் நன்றாக முடிவு செய்து விட்டு பிறகு வா.

முதலில் இப்படி போ என்கிறாய்.. பிறகு அப்படி போ என்கிறாய்..

நில் என்கிறாய்... போ என்கிறாய்...

வலது பக்கம் போ என்கிறாய்.. இடது பக்கம் போ என்கிறாய்...

இது என்ன கூத்து..?

உருப்படியாக ஏதாவது ஒன்றை தீர்மானம் செய்து வை..

அதுவரை நான் போய் ஒரு காப்பியை அருந்திவிட்டு வருகிறேன்.

வந்தவுடன் நீ சொன்னதை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..

-ஓஷோ

Tags:    

Similar News