கதம்பம்

அறிவுத் தாகம்!

Published On 2024-05-06 09:33 GMT   |   Update On 2024-05-06 09:33 GMT
  • ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்” என்றார்.
  • அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.

இன்னும் சற்று நேரத்தில் சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை. உடன் இருக்கும் கைதி ஒரு பாடலை இனிமையாகப் பாடத் தொடங்கினான். கருத்தாழமிக்க அப்பாடலை தனக்காக மீண்டும் ஒருமுறை பாடச் சொன்னார் சாக்ரடீஸ்.

அவன், "நீயோ சற்று நேரத்தில் பரிதாபமாக சாகப் போகிறாய்! உனக்கு பாடல் ஒரு கேடா? தெரியாமல் தான் கேட்கிறேன், உனக்கு எந்த விதத்தில் இது பயன்படப் போகிறது? நீ வாழப் போகிறவன் என்றால் கூட நான் மீண்டும் பாடிக்காட்டினால் நீ அதை பாடி பிறர் கேட்டால் உனக்கும் எனக்கும் பெருமை. சாகப்போகிற உனக்கு இது எதற்கு?" என்று கிண்டலும் கேலியும் செய்தான்.

அமைதியாக சாக்ரடீஸ் கூறினார், "இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவேன் என்பது எனக்குத் தெரியும். இறப்பதற்குள் இந்த ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்" என்றார்.

அதற்கு முந்தைய நாள் மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருந்தார் ஒரு புத்தகத்தை. நீங்கள் தான் நாளை இறந்து விடப் போகிறீர்களே எதற்காக இப்படி விழுந்து விழுந்து படிக்கிறீர்கள் என்று சிறைக்காவலர் கேட்டதற்கு "ஆம் நாளைக்குள் படித்துவிட வேண்டுமே இல்லாவிட்டால் நான் செத்துப் போனால் இந்த நூலை மீண்டும் படிக்க முடியாது அல்லவா?" என்றாராம். அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.

-கவிதா

Tags:    

Similar News