கதம்பம்
null

ஐஸ்லாந்தில் ஆன்லைன் ஓட்டு

Published On 2024-05-03 15:45 IST   |   Update On 2024-05-03 15:45:00 IST
  • ஐஸ்லாந்தின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துக்கு சமம்.
  • ஐஸ்லாந்து மக்கள் புத்தக பைத்தியம் என கூறப்படுவதுண்டு.

பீகார் அளவு நிலப்பரப்பில் 3,83,000 மக்கள் மட்டுமே வாழ்வதை கற்பனை செய்ய முடிந்தால் அதுதான் ஐஸ்லாந்து. தமிழ்நாட்டின் ஒரு சிறுநகரத்தின் மக்கள் தொகை மட்டுமே இருந்தாலும், ஐஸ்லாந்து ஒரு தனிநாடு.

ஐஸ்லாந்தின் முக்கிய வருமானம் சுற்றுலா தான். இயற்கை இன்னொரு கொடையையும் ஐஸ்லாந்துக்கு வழங்கியுள்ளது. அங்கே ஏராளமான வெப்பநீரூற்றுகள் உள்ளன. அதனால் அதில் இருந்து அதிகளவு ஜியோதெர்மல் மின்சாரம் எடுக்கபடுகிறது. அலுமினியம் உற்பத்திக்கு அதிக மின்சாரம் தேவை. அதனால் ஏராளமான அலுமினியம் தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால் ஐஸ்லாந்தின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துக்கு சமம். மக்களுக்கும் மிக மலிவான விலையில் மின்சாரமும், சுடுநீரும், வீடுகளுக்கு வெப்பமும் கிடைக்கும்.

ஐஸ்லாந்து மக்கள் புத்தக பைத்தியம் என கூறப்படுவதுண்டு. நாடு முழுக்க புத்தகங்கள் படிக்கும் கபேக்கள் ஆங்காங்கே காணப்படும். இத்தனை புத்தகம் படிப்பதால் இங்கே குற்றங்கள் மிக குறைவு. மொத்தமாகவே 140 குற்றவாளிகள் தான் சிறையில் இருக்கிறார்கள். 660 காவலர்கள் தான்.

ராணுவமே இல்லாத நாடு. அதனால் ஏராளமான ராணுவ செலவு மிச்சம்.

கல்வி , மருத்துவம் அனைத்தும் இலவசம். கல்லூரி கட்டணமும் இலவசம்.

உலகிலேயே ஆன்லைனில் ஓட்டு போட அனுமதிக்கும் ஒரெ நாடு ஐஸ்லாந்துதான்.

குற்றங்கள் இல்லாத, அமைதியான, சொர்க்கபூமி ஐஸ்லாந்து. காரணம் புவியியல் அதை தனிமைப்படுத்தியதும், இயற்கை அளித்த ஜியோதெர்மல் மின்சார கொடையும் தான்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News